பேராவூரணியில் 250 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா

309பார்த்தது
தஞ்சை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் சுமார் 250 கர்ப்பிணி தாய்மார்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு சந்தனம், குங்குமம், மாலை, வளையல், ரூ.500 மதிப்புள்ள சேலை உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும், 750 பேருக்கு 5 வகையான சாதங்கள் பரிமாறப்பட்டன. பேராவூரணி எம்.எல்.ஏ. சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார். அப்போது பேசிய அவர், மகளிருக்கு ரூ.5000 உரிமைத்தொகை வழங்கும் அறிவிப்பு அமைச்சர்களுக்கே தெரியாது என்றும், 2026ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாதம் ரூ.2000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்தி