கோடையில் கால்நடைகளை பாதுகாக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

1பார்த்தது
கோடையில் கால்நடைகளை பாதுகாக்க ஆட்சியர் அறிவுறுத்தல்
தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், கோடைக்கால கால்நடை பராமரிப்பு குறித்து முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். வெப்ப அயற்சியைத் தடுக்க கால்நடைகளுக்கு ஒரு நாளைக்கு 4 முதல் 5 முறை சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்றும், மாடுகள் அதிக தண்ணீர் குடிக்கத் தீவனத்தையோ அல்லது உப்புக் கட்டிகளையோ பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார். காலை 6 முதல் 10 மணி வரையிலும், மாலை 3 முதல் 7 மணி வரையிலும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும். கொட்டகையை நெருக்கமில்லாமலும், மரங்கள் வளர்த்து குளிர்ச்சியாகவும் பராமரிப்பது அவசியம். குறிப்பாக செம்மறியாடுகளுக்கு வெப்பத் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால், தாது உப்பு கட்டிகள் மூலம் சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

தொடர்புடைய செய்தி