பேராவூரணி அருகே துராங்குடியில் இருந்து அறந்தாங்கி நெடுங்குடி கைலாசநாதர் கோயிலுக்கு சிவராத்திரி விழாவில் கலந்து கொள்ள லோடு வேனில் 36 பேர் சென்றனர். ஞாயிறு ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது வேன் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி தூராங்குடியைச் சேர்ந்த ரமேஷ் (38) மற்றும் அவரது மனைவி கனிமொழி (34) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 19 பேர் காயமடைந்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.