பேராவூரணி தொகுதியில் நடைபெற்ற தேர்தல் போட்டியில், திமுக வேட்பாளர் நா. அசோக்குமார் 60,485 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கோவி. இளங்கோவை விட 3,105 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றியை வசப்படுத்தினார். இத்தொகுதியில் மொத்தம் பதிவான 1,74,973 வாக்குகள் 21 சுற்றுகளாக எண்ணப்பட்டு இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டன. திமுக வேட்பாளர் நா. அசோக்குமார் 60,485 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் கோவி. இளங்கோ 57,380 வாக்குகள் பெற்றார். தவெக வேட்பாளர் சந்திர காண்டீபன் 45,192 வாக்குகள் பெற்றார். நாதக வேட்பாளர் புவனா 9,036 வாக்குகள் பெற்றார்.