தஞ்சாவூர்: வெளிநாட்டில் இறந்தவர் உடலை கொண்டு வர உதவிய எம்பி

60பார்த்தது
தஞ்சாவூர்: வெளிநாட்டில் இறந்தவர் உடலை கொண்டு வர உதவிய எம்பி
துபையில் மாரடைப்பால் உயிரிழந்த பேராவூரணி அருகே உள்ள உடையநாடு கிராமத்தைச் சேர்ந்த நூ. ஹபிபுல்லா (50) என்பவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர திருச்சி மக்களவை உறுப்பினர் துரை வைகோ நடவடிக்கை எடுத்தார். பிப். 6-ஆம் தேதி உயிரிழந்த ஹபிபுல்லாவின் உடல், துரை வைகோவின் முயற்சியால் பிப். 8-ஆம் தேதி இரவு சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு, திங்கள்கிழமை காலை அடக்கம் செய்யப்பட்டது. உடலைக் கொண்டுவர உதவிய துரைவைகோவுக்கு உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி