கல்வித்துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி

3பார்த்தது
கல்வித்துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியக் கல்வித் துறை சார்பில், குருவிக்கரம்பையில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வட்டாரக் கல்வி அலுவலர் ராமமூர்த்தி மற்றும் மேற்பார்வையாளர் முருகேசன் ஆகியோர் பேரணியைத் தொடங்கி வைத்தனர். தொடக்கப் பள்ளியில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இப்பேரணியில், மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், பொதுமக்களுக்குத் துண்டுப் பிரசுரங்களை வழங்கியும் பங்கேற்றனர். ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் பலரும் கலந்து கொண்டு 2026 சட்டமன்றத் தேர்தலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி