கொப்பரைத் தேங்காய் விலை வீழ்ச்சி: விவசாயிகள் வேதனை

3பார்த்தது
கொப்பரைத் தேங்காய் விலை வீழ்ச்சி: விவசாயிகள் வேதனை
தமிழகத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் சிண்டிகேட் காரணமாக கொப்பரைத் தேங்காய் விலை கிலோ ₹250-லிருந்து ₹110 ஆகக் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இது அரசின் குறைந்தபட்ச ஆதார விலையான ₹120-ஐ விடக் குறைவு என்பதால், தென்னை விவசாயிகள் பராமரிப்புச் செலவைக் கூட எடுக்க முடியாமல் தவிக்கின்றனர். எனவே, அரசு உடனடியாகத் தலையிட்டு நாஃபெட் மூலம் கொப்பரையை நேரடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், முடங்கியுள்ள கேரள அரசின் 'கேராபெட்' திட்டத்திற்குத் தீர்வு காண வேண்டும் என்றும் கிழக்கு கடற்கரை சாலை தென்னை விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி