மனோராவில் ரூ. 41 கோடியில் கடல்பசு பாதுகாப்பு மையம் அடிக்கல்

1பார்த்தது
மனோராவில் ரூ. 41 கோடியில் கடல்பசு பாதுகாப்பு மையம் அடிக்கல்
தஞ்சை மாவட்டம் மனோராவில், இந்தியாவின் முதல் சர்வதேச கடல்பசு பாதுகாப்பு மையம் அமைப்பதற்கான பணிகள் வெள்ளிக்கிழமை அன்று தொடங்கின. தமிழ்நாடு முதலமைச்சரால் பிப்ரவரி 17-ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்ட இத்திட்டம், TN-SHORE திட்டத்தின் கீழ் 40.94 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலகத் தரத்தில் செயல்படுத்தப்படுகிறது. பாக் வளைகுடா பகுதியில் உள்ள கடல் பசுக்கள் மற்றும் கடல்சார் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. தொடக்க விழாவில் திருச்சி வன மண்டல பாதுகாவலர் காஞ்சனா, மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி