மீனவ இளைஞர்களுக்கு இலவசப் பயிற்சி

116பார்த்தது
மீனவ இளைஞர்களுக்கு இலவசப் பயிற்சி
தஞ்சாவூர் மாவட்ட கடலோரக் கிராமங்களைச் சேர்ந்த மீனவ இளைஞர்களுக்கு கடற்படை மற்றும் காவல் துறையில் சேருவதற்கான 90 நாட்கள் இலவசப் பயிற்சி தமிழக கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தால் வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சிக்கு 12-ஆம் வகுப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி பெறுவோருக்கு தங்குமிடம், உணவு மற்றும் மாதம் ₹1,000 உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பங்களை அதிராம்பட்டினம் அல்லது சேதுபாவாசத்திரம் கடலோரக் காவல் நிலையங்களில் பெறலாம். விண்ணப்பங்கள் அனுப்ப கடைசித் தேதி பிப்ரவரி 15 ஆகும்.

தொடர்புடைய செய்தி