திருச்சிற்றம்பலம் அருகே அடிக்கடி மின்தடை: பொதுமக்கள் அவதி

1பார்த்தது
திருச்சிற்றம்பலம் அருகே அடிக்கடி மின்தடை: பொதுமக்கள் அவதி
திருச்சிற்றம்பலம் அருகிலுள்ள கல்லூரணிக்காடு கிராமத்தில் ஓட்டங்காடு துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் வழங்கப்படுகிறது. கடந்த சில வாரங்களாக இரவு, பகல் பாராமல் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் குடிநீர் விநியோகம், விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கோடை வெயிலால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, தடையற்ற மின்சாரம் வழங்க மின் வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி