பேராவூரணி: மழையால் வீடு பாதிப்பு.. எம்எல்ஏ ரூ. 80 ஆயிரம் நிதியுதவி

52பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, சேதுபாவாசத்திரம் ஒன்றியம், ஊமத்தநாடு ஊராட்சி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் பவளக்கொடி, இதேபோல், மழையால் வீடு பாதிக்கப்பட்ட முதுகாடு ஊராட்சி ராஜகுமாரி, லோகாம்பாள், மலர்கொடி, கண்ணம்மா, வள்ளியம்மாள், அரும்பு, கொளக்குடி ஊராட்சி ராதிகா ஆகியோருக்கு தலா ரூ. 5 ஆயிரம் என 8 பேருக்கு மொத்தம் ரூ. 40 ஆயிரம் வழங்கினார். தொடர்ந்து பேராவூரணி ஒன்றியம் வலப்பிரமன்காடு, சொர்ணக்காடு ஆகிய இடங்களில் வீடு பாதிக்கப்பட்ட சோ. மாரிமுத்து, முனியாண்டி, அய்யாச்சாமி, ஆர். சுதாகர், எம். எம். சேகர், இந்திரா, புனல்வாசல் பத்மினி, பழைய பேராவூரணி சி. சிவக்குமார் ஆகியோருக்கு தலா ரூ. 5 ஆயிரம் வீதம் 8 பேருக்கு ரூ. 40 ஆயிரம் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி