பேராவூரணி தாசில்தார் அலுவலகத்தில் ஜூன் 4 முதல் ஜூன் 10-ம் தேதி வரை காலை 10 மணிக்கு ஜமாபந்தி (வருவாய்த்தீர்வாயம்) நடைபெறுகிறது. ஜூன் 4-ல் பெருமகளூர், 5-ல் குருவிக்கரம்பை, 9-ல் ஆவணம் மற்றும் 10-ம் தேதி பேராவூரணி உள்வட்டங்களுக்கும் இந்த முகாம் நடைபெறும். பொதுமக்கள் பட்டா மாறுதல், எல்லைப் பிரச்சினை மற்றும் முதியோர் உதவித்தொகை போன்ற கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் (கலெக்டர்) வழங்கிப் பயன்பெறலாம் என தாசில்தார் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.