பேராவூரணி அருகே ரூ. 4. 96 கோடியில் ஏரி புனரமைக்கும் பணி

1பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ஊமத்தநாடு பெரிய ஏரியைப் புனரமைக்கும் பணியைச் சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் தொடங்கி வைத்தார். தமிழக அரசு நீர்வளத்துறை சார்பில் ரூ. 4.96 கோடி ஒதுக்கீட்டில் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் மூலம் ஊமத்தநாடு, ஆலடிக்காடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 992 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், நிலத்தடி நீர் ஆதாரமும் பெருகும். இந்நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி