பேராவூரணியில் பக்ரீத் தொழுகையில் ஏராளமானோர் பங்கேற்பு

1பார்த்தது
பேராவூரணியில் பக்ரீத் தொழுகையில் ஏராளமானோர் பங்கேற்பு
பேராவூரணியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜமாலியா பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. ஆண்களுக்கு காலை 8 மணிக்கும், பெண்களுக்கு 9 மணிக்கும் தனித்தனியே தொழுகைகள் நடத்தப்பட்டன. இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு, ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். இப்றாஹிம் நபிகளாரின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் குர்பானி கொடுத்து ஏழைகளுக்கும் உறவினர்களுக்கும் வழங்கினர். சுற்றுவட்டாரக் கிராமங்களிலும், தவ்ஹீத் ஜமாஅத் சார்பிலும் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.

தொடர்புடைய செய்தி