மதுக்கூர்: கோயில் இடத்தை மீட்கக்கோரி இந்து முன்னணி போராட்டம்

769பார்த்தது
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் வடக்கு பகுதியில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள திமுக கட்சி அலுவலகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை இடத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள பெரியார், அண்ணா, கலைஞர் சிலைகளை அகற்றக் கோரி, தஞ்சை தெற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் மதுக்கூர் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிகாரிகளின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையை கண்டித்த போராட்டக்காரர்கள், இவற்றை அப்புறப்படுத்தாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என எச்சரித்தனர்.

தொடர்புடைய செய்தி