குளம் துார் வாரும் பணிக்கு ரூ. 50, 000 வழங்கிய எம். எல். ஏ. ,

332பார்த்தது
குளம் துார் வாரும் பணிக்கு ரூ. 50, 000 வழங்கிய எம். எல். ஏ. ,
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே பஞ்சநதிபுரம் கிராமத்தில் உள்ள உள்ளிக்குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்தது. இப்பகுதி மக்கள் 'கைபா' அமைப்புடன் இணைந்து குளத்தை தூர்வாரும் பணியை தொடங்கினர். இந்தப் பணியை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், எம்.எல்.ஏ. அசோக்குமார் ஆகியோர் அக்டோபர் 13 அன்று தொடங்கி வைத்தனர். நேற்று பணிகளை பார்வையிட்ட எம்.எல்.ஏ. அசோக்குமார், கிராம மக்களை பாராட்டி, தூர்வாரும் பணிக்காக தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 50,000 ரூபாய் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி