மாவடுகுறிச்சியில் சங்கர மடம் சார்பில் நல்லேர் பூட்டும் விழா

பேராவூரணி அருகே மாவடுகுறிச்சியில் காஞ்சிபுரம் ஸ்ரீசங்கர மடத்தின் கிளை சார்பில் சித்திரை முதல் நாள் பொன்னேர் பூட்டும் நிகழ்ச்சி நடந்தது. சங்கர மடம் கிளை நிர்வாகி முனைவர் ஸ்ரீதர் தலைமையில், மாவடுகுறிச்சி கிராமத்தில் ஆண்டு முழுவதும் நல்ல மழை, நல்ல மகசூல் கிடைத்திட வேண்டும் என சித்திரை மாதத்தின் முதல் நாளில் உழவு ஓட்டி, சூரிய பகவானிடம் வேண்டுதலே பொன்னேர் உழுதலின் நோக்கம்.
சித்திரை மாதம் முதல் நாளில் விவசாயிகள் மாடுகளை நீராட்டி சந்தனம், பொட்டு வைத்து, வயலில் கணபதி பூஜை, வருண பூஜை, சூரிய நாராயண பூஜை ஆகியவை நடத்தப்பட்டன. அப்போது உழவு செய்ய வேண்டிய இடத்தில் இயற்கையான உரங்களை தெளித்தும், நவதானியங்களை தூவியும், பின்னர் ஏர்க்கலப்பையில் மாட்டைப் பூட்டி விவசாயிகள் உழவு செய்தனர். நல்லேர் எனும் பொன்னேர் பூட்டும் நிகழ்ச்சி காலம் காலமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் அந்த ஆண்டு விவசாயம் செழித்து வளம் கொழிக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மாவடுகுறிச்சி கிராமத்தினர் கலந்து கொண்டனர்.