தஞ்சாவூர்: புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் தவெகவில் ஐக்கியம்

1019பார்த்தது
தஞ்சாவூர்: புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் தவெகவில் ஐக்கியம்
தஞ்சாவூர் மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் மாவட்டச் செயலாளர் பண்ணவயல் மா. குருமூர்த்தி மற்றும் பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் குழந்தை சேசு ஆகியோர் தங்களது கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளனர். இவர்களுடன் 50-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களும் இணைந்துள்ளனர். பட்டுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்டச் செயலாளர் ஏனாதி சி. மதன் முன்னிலையில் இவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) தங்களை இணைத்துக் கொண்டனர். இந்தச் சம்பவம் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி