தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியத்திற்குட்பட்ட அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத்திற்கான பயிற்சி பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 4 நாட்கள் நடைபெற்றது. இப்பயிற்சிக்கு பேராவூரணி வட்டாரக் கல்வி அலுவலர் அங்கையற்கன்னி தலைமை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர் கலாராணி முன்னிலை வகித்தார். அனைவரையும் வட்டார வள மேற்பார்வையாளர் கோகுல கிருஷ்ணன் வரவேற்றார். ஆசிரியர்களுக்கு வகுப்பறையில் மாணவர்களின் அடிப்படைத் திறன்கள் வளர்ப்பது குறித்து பயிற்சி நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட தொடக்கநிலைப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இப்பயிற்சிக்கு, வட்டாரத்தில் உள்ள ஆசிரியர்கள் கருத்தாளர்களாக செயல்பட்டனர். நிறைவாக வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் சாஷிதா பானு நன்றி கூறினார். பயிற்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் செய்திருந்தார்.