பேராவூரணி அருகே பழைய பேராவூரணி பெட்ரோல் பங்க் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், வளப்பிரமன்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கருப்பையா (75) உயிரிழந்தார். மற்றொரு வாகன ஓட்டியான குழந்தை ராசு (30) காயமடைந்து புதுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.