பட்டுக்கோட்டை: சிக்கிய 300 கிலோ போதைப்பொருட்கள்

1பார்த்தது
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை செம்பரான்குளம் அருகே காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில், இன்னோவா காரில் கடத்தி வரப்பட்ட 300 கிலோ எடையுள்ள, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹான்ஸ், கூல் லிப் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக தஞ்சாவூரைச் சேர்ந்த சையது அபுதாஹிர் (26) என்பவரை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்த கார் மற்றும் போதை பொருட்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி