பட்டுக்கோட்டை ஆயுர்வேத மைய‌ம்: பாலியல் தொழில்: பெண் தப்பினார்

3பார்த்தது
பட்டுக்கோட்டை ஆயுர்வேத மைய‌ம்: பாலியல் தொழில்: பெண் தப்பினார்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் இயங்கி வந்த ஆயுர்வேத சிகிச்சை மையத்தில், மசாஜ் என்ற பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் தொடர்புடைய சேலத்தைச் சேர்ந்த நித்தியானந்தம் (35) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த மையத்தை நடத்திவிட்டு தப்பி ஓடிய சென்னையைச் சேர்ந்த 30 வயது பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி