தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே முதல்சேரி கிராமத்தில் நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த இருவர், பெண்களின் கழுத்தில் இருந்த 8 சவரன் தங்கச் சங்கிலிகளை பிளேடால் அறுத்துத் திருடினர். அவர்களைப் பிடிக்க முயன்ற மைக்கேல் நவீன் என்பவரை இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டுத் தப்பினர். காயமடைந்த நவீன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோப்ப நாய் மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது.