பட்டுக்கோட்டை: வங்கி அதிரடியால் விவசாயி கடும் வேதனை

459பார்த்தது
தஞ்சை மாவட்டம் கன்னியாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குணசேகரன், டிராக்டர் கடன் வாங்கியுள்ளார். அவரது கரும்பு மானியத் தொகை அதே வங்கியில் உள்ள அவரது மனைவியின் கணக்கில் வரவாகியுள்ளது. அந்தப் பணத்தைக் கொண்டு டிராக்டர் கடனை நேர் செய்யுமாறு அவர் கோரியும், வங்கி நிர்வாகம் மறுத்துள்ளது. மாறாக, கடன் கட்டவில்லை எனக் கூறி குணசேகரனின் ரூ. 1 கோடி மதிப்புள்ள சொத்தை நீதிமன்றம் மூலம் ஜப்தி செய்ய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் வேதனையடைந்துள்ள விவசாயி குடும்பத்தினர், தன் சொத்தை மீட்க வங்கியின் உயரதிகாரிகள், தமிழக முதல்வரும் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி