பட்டுக்கோட்டை: மாணவர்களுக்கு பரிசளிப்பு பாராட்டு விழா

0பார்த்தது
பட்டுக்கோட்டை: மாணவர்களுக்கு பரிசளிப்பு பாராட்டு விழா
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை டாலண்ட் பள்ளி அரங்கில், எஸ். எல். எம் (SLM) அமைப்பின் 9-ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. மாணவர்களின் அறிவு, ஆங்கிலம் மற்றும் மேடைப் பேச்சுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை அன்னை தெரசா பள்ளி முதல்வர் நந்தினி ஒருங்கிணைத்தார். விழாவில் கல்வி நிறுவனங்களின் தாளாளர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்திப் பேசினர். தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்தது.

டேக்ஸ் :