தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில், நிலப்பிரபுத்துவ எதிர்ப்பாளரும் வீரத்தியாகிகளுமான வாட்டாக்குடி இரணியன், ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் மற்றும் ஜாம்பவானோடை சிவராமன் ஆகியோரின் நினைவிடத்தில் இடதுசாரி இயக்கங்கள் சார்பில் வீரவணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன் மற்றும் சிபிஐ மாவட்டச் செயலாளர் சக்திவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில், இருசக்கர வாகனப் பேரணி மற்றும் மலர் அஞ்சலி மூலம் தியாகிகளின் போராட்ட வரலாறு நினைவு கூறப்பட்டது. இதில் ஏராளமான கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.