பட்டுக்கோட்டை: வீரக்குறிச்சி தேவாலய கொடியேற்று விழா

1பார்த்தது
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வீரக்குறிச்சி - சுக்கிரன்பட்டியில் உள்ள புகழ்பெற்ற புனித அந்தோணியார் திருத்தல கொடியேற்று விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ மதத்தினருக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. பேண்ட் வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட கொடி, புனிதப்படுத்தப்பட்டு ஏற்றப்பட்ட இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி