பேராவூரணி: சுவர் இடிந்து விழுந்து.. 3 வயது குழந்தை பலி

65பார்த்தது
பேராவூரணி: சுவர் இடிந்து விழுந்து.. 3 வயது குழந்தை பலி
பேராவூரணி அருகே கழிவறை சுவர் இடிந்து விழுந்து பெண் குழந்தை பலியானது. பேராவூரணி அருகே வீட்டின் அருகே உள்ள கழிவறை சுவர் இடிந்து விழுந்து பெண் குழந்தை பலியானார். புதுக்கோட்டை மாவட்டம் பாலன் நகரை சேர்ந்தவர் அருண்குமார் (41). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சரண்பிரியா (33) இவர்களது மகள் தியா (3). பேராவூரணி அருகே ஒட்டங்காடு அருகே உள்ள நடுமணைக்காடு கிராமத்தில் வசித்து வரும் தனது உறவினர் வீட்டுக்கு அருண்குமார் நேற்று குடும்பத்துடன் வந்துள்ளார். அந்த பகுதியில் உள்ள குழந்தைகளுடன் நேற்று மாலை தியா விளையாடிக் கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக வீட்டின் மண்சுவர் அருகே உள்ள ஹாலோபிளாக்கில் கட்டப்பட்ட கழிவறை சுவர் இடிந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தியா மேல் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இது குறித்து திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் அருண்குமார் புகார் அளித்ததன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பொன்னியின் செல்வன் வழக்கு பதிவு செய்து தியாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். உறவினர் வீட்டுக்கு வந்த இடத்தில், பக்கத்து வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 3 வயது பெண் குழந்தை பலியான சம்பவம் ஒட்டங்காடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.