தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே முடச்சிக்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அய்யாதுரை (65), தனது மகள் கவுசல்யாவுடன் வாக்காளர் சிறப்பு முகாமில் புகைப்படம் எடுக்க பேராவூரணிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, பேராவூரணியிலிருந்து சேதுபாவாசத்திரம் சென்ற மினி பஸ், அய்யாதுரை ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அய்யாதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகள் கவுசல்யா காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பேராவூரணி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.