அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளிமாவட்ட நெல் வாங்க தடை விதிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் வெளிமாவட்டங்களில் இருந்து லாரிகளில் நெல்லை கொண்டு வந்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் வெளிமாவட்ட நெல்லை கொண்டு வந்து இடைத்தரகர்கள் மூலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளர், இதை தடுக்காமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. இதேபோல் கடந்த காலங்களில் பருவகால பணியாளர்களாக பணியாற்றி வரும் பட்டியல் எழுத்தாளர், உதவியாளர், பாதுகாவலர், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணி அமர்த்துவதற்கு ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 10,000 லஞ்சமாக வாங்கப்படுகிறது.
இந்த செயல்களை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையாக கண்டிப்பதோடு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்துகின்றனர்.