பேராவூரணியில் மாவட்ட அம்மா பேரவை சார்பில் பேராவூரணி நகரில் நடைபெற்ற திண்ணை பிரச்சாரத்தில் திமுக அரசின் ஆட்சியின் அவலங்களை எடுத்து கூறும் வகையில், தேர்தல் வாக்குறுதியில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாத திமுக அரசை முற்றிலும் புறக்கணித்து, அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்த பிறகு தகுதியான குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் எனக் கூறி தற்போது நடத்தி வரும் திமுக அரசை கண்டித்து மாபெரும் திண்ணை பிரச்சாரம் மற்றும் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தஞ்சை தெற்கு மாவட்ட கழக செயலாளர் சி. வி. சேகர் தலைமை வகித்தார் பேராவூரணி நகரக் கழகச் செயலாளர் நீலகண்டன் வரவேற்று பேசினார். மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் கார்த்திகேயன், மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் மலைஅய்யன், மாநில விவசாய பிரிவு இணைச்செயலாளர் கோவிந்தராஜன், மாவட்டக் கழக அவைத்தலைவர் திருஞானசம்பந்தம், மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் ஜவஹர்பாபு, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இலக்கிய அணி இணைச் செயலாளர் சின்னசாமிநாதன், மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் திலீபன், மாவட்டத் துணைச் செயலாளர் தவமணி மலையப்பன், மற்றும் பேராவூரணி வடக்கு ஒன்றிய செயலாளர் துரைமாணிக்கம்,
சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளர் அருணாச்சலம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.