பேராவூரணி அருகே மாவடுகுறிச்சியைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி பிச்சையம்மாளின் முகத்தில் மிளகாய் பொடி தூவி, ஊன்றுகோலால் தாக்கி 2.5 பவுன் நகையைப் பறித்த பக்கத்து வீட்டு இளம்பெண் சோனியா காந்தி (26) என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர். தாக்குதலில் மயங்கிய மூதாட்டியை, சோனியா காந்தியின் தாய் பானுமதி, 'குளியலறையில் வழுக்கி விழுந்துவிட்டார்' என நாடகமாடி மருத்துவமனையில் சேர்த்துள்ளார். மயக்கம் தெளிந்த மூதாட்டி உண்மையை கூறியதை அடுத்து, அவரது மகன் அளித்த புகாரின் பேரில் பேராவூரணி காவல் துறையினர் இளம்பெண் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.