பேராவூரணி: தேவையற்ற வரிகள் நீக்கப்பட மீனவர்கள் வலியுறுத்தல்

340பார்த்தது
பேராவூரணி: தேவையற்ற வரிகள் நீக்கப்பட மீனவர்கள் வலியுறுத்தல்
தமிழ்நாடு மீனவர் பேரவை அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் தாஜுதீன், பிரதமர் மற்றும் தமிழக முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில், டீசல் விலை உயர்வால் மீனவர்கள் தங்கள் வருவாயில் 70%-க்கும் மேல் எரிபொருளுக்கே செலவிட வேண்டியுள்ளது. கடலில் தொழில் செய்யும் மீனவர்கள் சாலையைப் பயன்படுத்துவதே இல்லாத சூழலில், அவர்களின் டீசல் மீது சாலை மற்றும் பசுமை வரிகளை விதிப்பது நியாயமற்றது. எனவே, மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க இந்த வரிகளை முற்றிலும் நீக்குவதோடு, உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலையையும் திரும்பப் பெற வேண்டும் என்று கோரியுள்ளார்.

தொடர்புடைய செய்தி