தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் பாரதி நகரில் வசிக்கும் மின் கணக்கீட்டாளர் வள்ளியம்மை (47) மின்விசிறியைத் தொட்டபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கருணை அடிப்படையில் பணிக்குச் சேர்ந்த இவருக்கு, மின்வாரியத்தில் பணிபுரிந்த இவரது கணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததால் பணி கிடைத்தது. இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.