தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கேரளாவிலிருந்து லாரிகள் மூலம் நேரடியாக இறக்குமதி செய்யப்படும் அன்னாசிப் பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது. வாரச்சந்தையில் 3 பழங்கள் 100 ரூபாய், தரத்திற்கேற்ப கிலோ 40 முதல் 60 ரூபாய் வரை விற்பனையாகின்றன. கோடை வெப்பத்திற்கு இதமளிக்கும் இப்பழங்களை பொதுமக்கள் கிலோ 50 ரூபாய் என மலிவான விலைக்கு ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.