தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், பேராவூரணி வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில், உதய சூரியபுரம் கடைவீதியில் கலைஞர் 102 ஆவது பிறந்த நாள் விழா மற்றும் திமுக நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. திமுக ஒன்றியச் செயலாளர் கோ. இளங்கோவன் வரவேற்றுப் பேசினார். தலைமை செயற்குழு உறுப்பினரும், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினருமான நா. அசோக்குமார் கலந்து கொண்டு பேசினார். தலைமை கழக பேச்சாளர் மெட்ரோ சேகர், இளம் பேச்சாளர் ரகுநாத் ஆகியோர் சிறப்புரையாற்றினர். திமுக ஒன்றியச் செயலாளர் க. அன்பழகன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் அலிவலம் மூர்த்தி, அவைத் தலைவர் சுப. சேகர், இளைஞர் அணி டாக்டர் சந்திரசேகர், ஆர். கே. பி. குமார், பொதுக்குழு உறுப்பினர் அ. அப்துல் மஜீத், மகளிர் அணி தீபலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.