தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறையால் வைக்கப்பட்ட திசைகாட்டும் பெயர்ப்பலகை தற்போது சிதிலமடைந்து, ஊர்களின் பெயர்கள் அழிந்துவிட்டன. இதனால், இவ்வழியாகச் செல்லும் வெளிவட்டார வாகன ஓட்டிகளும் சுற்றுலாப் பயணிகளும் திசை அறியாமல் அவதிப்படுகின்றனர். பயணிகளின் நலன் கருதி உடனடியாகப் புதிய வழிகாட்டிப் பலகையை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.