பேராவூரணி: நீட் தேர்வை எதிர்த்து தி. க, கூட்டணி ஆர்ப்பாட்டம்

2பார்த்தது
இந்தியாவில் நீட் தேர்வை முற்றாக ரத்து செய்ய வலியுறுத்தி, திராவிடர் கழகம் சார்பில் சனிக்கிழமை தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக, சிபிஎம், சிபிஐ, மதிமுக, தவிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி முழக்கங்களை எழுப்பினர். திராவிடர் கழக மாவட்டக் காப்பாளர் வீரையன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி