தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடலோரப் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால், கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரித்துள்ளது. தற்போது விசைப்படகுகளுக்கான மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில், இந்த வானிலை எச்சரிக்கை காரணமாக 32-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 8,000 நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்குச் செல்லவில்லை. அவர்களின் படகுகள் அனைத்தும் கரைகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.