பேராவூரணி: பலாப்பழம் தலையில் விழுந்து பெண் பலி

988பார்த்தது
பேராவூரணி: பலாப்பழம் தலையில் விழுந்து பெண் பலி
பேராவூரணி அருகே மேல ஓட்டங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பொண்ணு (35). 100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளியான இவர் கடந்த 22-ஆம் தேதி மதிய உணவு இடைவேளையின் போது பலா மர நிழலில் அமர்ந்திருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக 3 பலாப்பழங்கள் தலையில் விழுந்து பலத்த காயமடைந்தார். புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருச்சிற்றம்பலம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி