பேராவூரணி: ரயில் முன் பாய்ந்து இரண்டு பேர் தற்கொலை

85பார்த்தது
பேராவூரணி: ரயில் முன் பாய்ந்து இரண்டு பேர் தற்கொலை
பேராவூரணி அருகே இரு வேறு சம்பவங்களில் ரயில் முன் பாய்ந்து இரண்டு பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
நேற்று இரவு காரைக்குடியிலிருந்து திருவாரூர் சென்ற பாசஞ்சர் ரயில் முன் பேராவூரணி முனீஸ்வரர் நகர் அருகே அதே பகுதியை சேர்ந்த துரைராஜ் மனைவி சரோஜா (70) சற்று மனநலன் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது இவர் ரயில் முன் பாய்ந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து பட்டுக்கோட்டை ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து உடலை பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

இன்று காலை திருவாரூரில் இருந்து காரைக்குடி சென்ற ரயிலில் பேராவூரணி நீலகண்டபுரம் பகுதியைச் சேர்ந்த நீலகண்ட பிள்ளையார் கோயில் அருகே அர்ச்சனை கடை நடத்திவரும் சாத்தப்பன் மகன் செல்வராஜ் (52) சிறுநீரகக் கோளாறு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக டயாலிஸிஸ் செய்து வந்ததால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. நீலகண்டபுரம் ரயில்வே கேட் அருகே ரயில்முன் பாய்ந்ததில் கால்கள் துண்டாகி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து பட்டுக்கோட்டை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி