பேராவூரணி: கோயிலில் இன்று வைகாசி விசாக பூஜை விழா

79பார்த்தது
பேராவூரணி: கோயிலில் இன்று வைகாசி விசாக பூஜை விழா
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், வாத்தலைக்காடு கிராமத்தில் எழுந்து அருள் பாளிக்கும் ஸ்ரீவள்ளி ஸ்ரீ தேவசேனா சமேத ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக பூஜை இன்று காலை 9. 30 மணிக்கு மேல் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து மதியம் 12 மணியளவில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை வாத்தலைக்காடு கிராமத்தார்கள் செய்துள்ளனர். இக்கோவிலில், சுற்றி உள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். தற்போது கோவிலில் வழிபாடு செய்வதற்காக பொதுமக்கள் பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இப்பகுதி பக்தர்களும் வைகாசி விசாக பூஜையில் கலந்து கொள்ளுமாறு கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி