தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே வாத்தலைக்காடு கிராமத்தில் உள்ள கற்பக விநாயகர், ஸ்ரீலெட்சுமி நரசிம்மர், வாராகி அம்மன் திருக்கோவில்களில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசர்வசித்தி ஆஞ்சநேய சுவாமிக்கு கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு ஹனுமன் மூலமந்த்ர மஹாயாகம் சிறப்புடன் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை வாத்தலைக்காடு கிராம மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.