தஞ்சை: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் கூறியுள்ளதாவது, பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், மாவட்டம் வாரியாக கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 11, 12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு
21. 01. 2024 ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்றும், கல்லூரி மாணவர்களுக்கு
22. 01. 2024 ஆம் தேதி புதன் கிழமையன்றும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதில் கலந்து கொள்ளும் மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்வதற்குரிய படிவத்தை நிறைவு செய்து பள்ளித்தலைமையாசிரியர், கல்லூரி முதல்வர், துறைத் தலைவரின் பரிந்துரையுடன் போட்டி தொடங்கும் முன்பு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் அளிக்க வேண்டும்.
ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரியிலிருந்தும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில், ஒவ்வொரு போட்டிக்கும் ஒருவர் வீதம் மொத்தம் 3 மாணவர்கள் மட்டும் கலந்துகொள்ளலாம்.
ஒவ்வொரு போட்டிக்கும் முதல்பரிசு ரூ. 10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ. 7, 000 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ. 5 ஆயிரம் வீதம் மொத்தப் பரிசுத் தொகையாக ரூ. 1, 32, 000 காசோலையாக வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.