விவசாயிகளுக்கு மானியத்தில் விதை நெல், திரவ உயிர் உரம் வழங்கல்

3பார்த்தது
விவசாயிகளுக்கு மானியத்தில் விதை நெல், திரவ உயிர் உரம் வழங்கல்
பேராவூரணியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில், வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் சான்று பெற்ற விதைகள் மற்றும் இடுபொருள் வினியோகம் செய்யப்பட்டது. வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராணி தலைமை தாங்கினார். அட்மா குழு தலைவர் அன்பழகன் முன்னிலை வகித்தார். அசோக்குமார் எம்.எல்.ஏ. விவசாயிகளுக்கு கோடை சாகுபடிக்கான விதை நெல் மற்றும் திரவ உயிர் உரங்களை மானியத்தில் வழங்கினார். வேளாண்மை அலுவலர் சாகித்யா, துணை வேளாண்மை அலுவலர் கோவிந்தராஜ், உதவி வேளாண்மை கார்த்திகேயன், கவிதா பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி