பேராவூரணி அருகே பனை மரங்கள் வெட்டப்பட்டதாக பொதுமக்கள் புகார்

2பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே மனோராவில், ரூ. 40 கோடி மதிப்பீட்டில் கடற்பசு பாதுகாப்பு மையம் அமைப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட பனை மரங்களை வனத்துறையினர் சட்டவிரோதமாக வெட்டி அழித்ததாகக் கூறி, பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணியினர் பனை மரங்களின் அடியில் அமர்ந்து ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கை நிறைவேறாவிட்டால் கிழக்கு கடற்கரைச் சாலையில் மறியல் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி