சேதுபாவாசத்திரம் வட்டார வள மையம் சார்பில், குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளியில் 1 முதல் 3 ஆம் வகுப்பு அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான 3 நாள் புதிய பாடநூல் புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது. வட்டாரக் கல்வி அலுவலர் அ. அங்கயற்கண்ணி பயிற்சியைத் துவக்கி வைத்தார். ஆடுதுறை மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவன முதல்வர் (பொ) முனைவர் ஜெயராஜ், புதிய பாடநூல் கற்பித்தல் மற்றும் மதிப்பீட்டு முறைகள் குறித்து விளக்கமளித்தார். அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு சார்ந்த இப்பயிற்சியில், ஒன்றியத்தைச் சேர்ந்த 101 பள்ளிகளில் இருந்து 115 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.