பேராவூரணியில் அம்மா உணவகத்தை திறக்க கோரிக்கை

2பார்த்தது
பேராவூரணியில் அம்மா உணவகத்தை திறக்க கோரிக்கை
பேராவூரணிக்கு மருத்துவ சேவை, தாலுக்கா அலுவலகம் போன்ற தேவைகளுக்காக வரும் ஏழை, எளிய மக்கள் மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள், உணவகங்களில் விலை அதிகமாக இருப்பதால் உணவின்றி அவதிப்படுகின்றனர். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மற்றும் தெருவோரம் வாழும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பேராவூரணி புதிய பேருந்து நிலையத்தில் உடனடியாக அம்மா உணவகம் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்க மாநிலத் தலைவர் முனைவர் ஜீவானந்தம் முதலமைச்சருக்குக் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி