சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் சாலை பணிகள் துவக்கம்

350பார்த்தது
சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் சாலை பணிகள் துவக்கம்
சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் 7 ஊராட்சிகளில் ரூ. 4.21 கோடி மதிப்பீட்டில் 9 சாலைப் பணிகள் எம்எல்ஏ அசோக்குமார் தலைமையில் தொடங்கின. இரண்டாம்புளிக்காடு, சேதுபாவாசத்திரம் மீனவர் காலனி, நாடியம், குருவிக்கரம்பை உள்ளிட்ட ஊராட்சிகளில் சாலைகள் வலுப்படுத்தப்படும். அலமதிக்காடு முதல் மார்க்கெட் சாலை, சேதுபாவாசத்திரம் மீனவர் காலனி சாலை, நாடியம் ஊராட்சி நவக்கொல்லை சாலை, மருங்கபள்ளம் காமாட்சி அம்மன் கோவில் சாலை, குருவிக்கரம்பை ஊராட்சி பள்ளிவாசல் காமாட்சி அம்மன் கோவில் இணைப்பு சாலை என மொத்தம் 9 பணிகள் இதில் அடங்கும்.
Job Suitcase

Jobs near you