தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கான ஊதியத்தில் சுமார் 1.30 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக அதிமுக பெண் கவுன்சிலர் நான்சி குற்றம் சாட்டி நேற்று கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார். தூய்மை பணியாளர்களுக்கு அரசு நிர்ணயம் செய்த ஊதியம் வழங்கப்படுவதில்லை என்றும், பிடித்தம் செய்யப்படும் இபிஎப் தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படுவதில்லை என்றும் அவர் கூறினார். இது குறித்து முறையாக விசாரணை நடத்தாமல் ஒப்பந்தத்தை ரத்து செய்வது மோசடி என்றும், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.